வயது முதிர்வதற்கான தவிர்க்க முடியாத அறிகுறிகளில் ஒன்று சுருக்கங்கள். குறிப்பாக அதிகம் வெளியே வெளிப்படும் பகுதிகளான முகம், கழுத்து, கைகள் போன்ற இடங்களில் தான் சுருக்கங்கள் முதலில் தோன்றும்.
மேலே கூறிய பகுதிகளில் தோல்பகுதி மிகவும் மென்மையாக இருப்பதால் அவை தீங்கு உண்டாக்கும் புறஊதா கதிர்களால் எளிதில் தாக்கப்பட்டு இந்த நிலை உண்டாகிறது.
இதன் காரணமாக இந்த பகுதிகள் எளிதில் வயது முதிர்ச்சிக்கான அறிகுறிகளை விரைவில் வெளிப்படுத்துகிறது. மாசு, சூரிய ஒளி, புகை போன்றவை சரும முதிர்ச்சிக்கான அபாயங்களை அதிகம் ஊக்குவிக்கும் காரணிகளாகும்.
பொதுவாக வயது முதிர்விற்கான அறிகுறிகளை போக்க முயற்சிக்கும் போது முகத்திற்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை கழுத்து பகுதிக்கு கொடுப்பதில் நாம் தவறிவிடுகிறோம்.
உண்மையில் வயது முதிர்வை அதிகம் வெளிப்படுத்தும் பகுதியாக இந்த கழுத்துப் பகுதி உள்ளது என்பதை நாம் உணர்ந்து இனி அதன்மேல் தனி கவனம் செலுத்துவது அவசியம்.