புரோட்பேன்ட் மற்றும் தொலைக்காட்சி சேவைகள் இன்று காலை முதல் தமக்கு கிடைக்கவில்லை என பிரித்தானியாவின் வேர்ஜின் மீடியாவின் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்த பிரச்சினை இன்று காலை 8 மணி முதல் இருந்து வருவதுடன் இது குறித்து 905 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக டவுன் டிடேக்டர் இணையத்தளம் கூறியுள்ளது.
தமது 8.7 மில்லியன் வாடிக்கையாளர்கள் இன்று காலை இந்த பிரச்சினையை எதிர்க்கொண்டதாகவும் தற்போது அது தீர்க்கப்பட்டு விட்டதாகவும் வேர்ஜின் மீடியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
லண்டனில் ஒரு பகுதி வாடிக்கையாளர்கள் இணையத்தள இணைப்பு தொடர்பான பிரச்சினை எதிர்நோக்கியதாகவும் பெரும்பான்மையான 6 மில்லியன் புரோட்பேன்ட் வாடிக்கையாளர்கள் இந்த பிரச்சினையை எதிர்நோக்கவில்லை எனவும் வேர்ஜின் மீடியா கூறியுள்ளது.
எனினும் சில வாடிக்கையாளர்கள் தற்போது டுவிட்டர் மற்றும் டவுள் டிடேக்டர் இணையத்தளம் ஆகியவற்றில் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர்.
குறிப்பிட்ட இணைய சேவைகளை பெற்றுக்கொள்வதில் தாம் பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக இன்று காலை 8 மணி முதல் முறைப்பாடு செய்துள்ளனர் எனவும் அவர்களில் 60 வீதமானவர்கள் வேர்ஜின் மீடியாவின் வாடிக்கையாளர்கள் எனவும் தமது இணையத்தள இணைப்பு தொடர்பான பிரச்சினையை இவர்கள் எதிர்நோக்கி இருப்பதாகவும் டவுன் டிடேக்டர் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளளது.
முறைப்பாடு செய்தவர்களில் 21 வீதமானவர்கள் தமக்கு தொலைக்காட்சி சேவைகள் கிடைக்கவில்லை எனக் கூறியுள்ளனர். 14 வீதமானோர் செல்போன் இணையத்தள இணைப்பு கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அரசாங்கம் வழங்கியுள்ள வழிக்காட்டல்களுக்கு அமைய பிரித்தானியாலில் 30 வீதமானவர்கள் தற்போது இணையத்தளம் வழியாக வீடுகளில் இருந்து வேலை செய்து வரும் சூழ்நிலையில் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.