தனியார் கல்வி நிறுவனங்களில் 100 இற்கும் அதிக மாணவர்களை வகுப்பறையில் அனுமதிக்கலாமா என்பதை பரிசீலனை செய்யுமாறு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிராச்சிக்கு, ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
கொரானா தடுப்ப நடவடிக்கையாக தனியார் வகுப்புக்களில் 100 இற்கும் குறைந்த மாணவர்களையே இணைத்துக் கொள்ள முடியுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க வெளியிட்ட வழிகாட்டல் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு தனியார் கல்வி நிலைய ஆசிரியர்கள் ஆட்சேபணை தெரிவித்துள்ளனர். முக்கிய நகரங்களில் உள்ள தனியார் கல்வி நிலையங்களில் ஒரு வகுப்பில் 1000 இற்கும் அதிக மாணவர்கள் கல்வி கற்கிறார்கள். நீண்ட விடுமுறையால் மாணவர்களின் கற்றல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வகுப்பறையில் மாணவர்களை மட்டுப்படுத்துவது மாணவர்களின் கல்வியை பாதிக்குமென கல்வியமைச்சிற்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து, ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அத்துடன், அரசியல் கட்சிகளின் கூட்டங்களில் 500 வரையான பொதுமக்களை அனுமதிக்கலாமா என்பது பற்றியும் ஆலோசனை கோரியுள்ளார்.