மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக பொச்செயலாளராக சசிகலாவை நியமிக்க வேண்டும் என அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சசிகலா முதல்வராக பதவியேற்க வேண்டும் என கூறிவருகிறார்.
இந்த கருத்துக்கு மேலும் வலு சேர்க்கும் வண்ணம் சசிகலா முதல்வராக பொறுப்பேற்பதில் தவறேதும் இல்லை என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் போது சசிகலாவை முன்னிறுத்தி வெற்றி பெறச் செய்து முதல்வராகவும் பதவியேற்க செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் சசிகலாவின் போஸ்டர்களை கிழித்தும், சாணம் எரிந்தும் தங்களது எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.
இதற்கு ஒருபடிமேலே பேய் சின்ன புரட்சித்தலைவர் எனவும் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
இப்படியே சென்று கொண்டிருந்தால் அதிமுக-வின் நிலை என்னவாகும்? சற்று பொறுத்திருந்து பார்ப்போம்.