தெற்கில் எதற்காக இராணுவ முகாம்கள் அமைக்கப்படுகின்றன என்பது பற்றி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விளக்கம் அளித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்…
வடக்கு கிழக்கில் காணப்படும் இராணுவ முகாம்களை இந்த அரசாங்கம் அகற்றி வருகின்றது. எனினும் தற்போது தெற்கில் இராணுவ முகாம்களை இந்த அரசாங்கம் அமைத்து வருகின்றது.
அரச சொத்துக்கள் தனியார் மயப்படுத்தப்படுவதனை எதிர்த்து மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டங்களை அடக்கவே இவ்வாறு வடக்கில் இராணுவ முகாம்கள் அமைக்கப்படுகின்றன.
எதிர்வரும் நாட்களில் பட்டினி பிணிக்காகவும் அரச சொத்துக்கள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கும் திட்டத்தில் தெற்கில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
பிரிவினைவாதம் காணப்பட்ட பகுதிகளிலேயே இராணுவ முகாம்கள் அமைக்கப்பட வேண்டும். அரசாங்கம், அரச சொத்துக்களை வெளிநாடுகளுக்கு காட்டிக் கொடுக்கும் சதித் திட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாக மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.