தென் ஆப்பிரிக்கா சுற்றுத்தொடரில் பங்கேற்றுள்ள இலங்கை அணிக்கும், தென் ஆப்பிரிக்காஅணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் பயிற்சி போட்டி நேற்று இடம்பெற்றது.
பொட்சேபிஸ்ட்ரூம் சென்வெஸ் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில்நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 6 விக்கட்ட இழப்பிற்கு 328 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இலங்கை அணி சார்பில் கவுஷல் சில்வா 80 ஓட்டங்களையும், கருணரத்ன 71 ஓட்டங்களையும், தனஞ்சயன் டி சில்வா 57 ஓட்டங்களையும், மெண்டிஸ் 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
தனஞ்சயன் டி சில்வா 57 ஓட்டங்களுடனும், உபுல் தரங்க 8 ஓட்ங்களுடனும் களத்தில் உள்ளனர்.
தென் ஆப்பிரிக்கா அணி சார்பாக லிண்டே 2 விக்கட்டுகளையும், ஸ்மித் மற்றும் ஒளிவீர் தலா 1 விக்கட்டையும் வீழ்த்தியுள்ளனர்.
இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டிஎதிர்வரும் 26ம் திகதி போட் எலிசபெத்தில் இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.