ஐக்கிய நாட்டுக்கான அமெரிக்கத் தூதர், சிரியா மீதான தீர்மானத்தின் மீது இன்று பாதுகாப்பு மன்றம் வாக்களிக்கவிருப்பதாகத்தெரிவித்துள்ளார். தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், கிளர்ச்சித் தரப்பினரிடம் உள்ள அலேப்போ நகரில் இருந்து வெளியேறும் பொதுமக்களைக் கண்காணிக்க, அது அனுமதியளிக்கும் என்று அவர் கூறினார்.
நியூ யார்க்கில் உள்ள ஐக்கிய நாட்டுத் தலைமையகத்தில் மூன்று மணி நேரத்திற்கு மேல் பேசிய பிறகு, திருமதி. சமந்தா பவர் (Samantha Power)தீர்மானத்திற்கு பேராதரவு கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
அலேப்போ நகரின் கிழக்குப் பகுதியில் இருந்தும், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் இரண்டு ஷியா முஸ்லிம் கிராமங்களில் இருந்தும் இடம்பெறவிருந்த வெளியேற்ற நடவடிக்கை தற்காலிகமாய் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மக்களை ஏற்றிச் செல்விருந்த பேருந்துகளைத் துப்பாக்கிக்காரர்கள் தாக்கியத்தைத் தொடர்ந்து அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சிரியாவின் மனித உரிமைக் கண்காணிப்பு அமைப்பு கூறியது. மக்களை Fuaa, Kafraya கிராமங்களுக்கு ஏற்றிச்செல்லவிருந்த பேருந்துகளை துப்பாக்கிக்காரர்கள் தீ யிட்டுக் கொளுத்தினர்.
இந்நிலையில் சுமார் 350 பேர் அலெப்போவின் கிழக்குப் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டிருப்பதாக மருத்துவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். அது நேற்று பின்னிரவில் நடந்ததாக அவர் தெரிவித்தார். வெளியேற்ற நடவடிக்கைத் தற்காலிகமாய் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வேளையில் அது நடந்துள்ளது. ஐந்து பேருந்துகளில் அவர்கள் அனுப்பப்பட்டதாக வெளியேற்ற நடவடிக்கையை ஒருங்கிணைக்கும் மருத்துக் குழுவின் தலைவர் Ahmad al-Dbis குறிப்பிட்டார்.