Loading...
இலங்கையில் உணவிற்காகவும் மத வழிபாடுகளுக்காகவும் பயன்படுத்தும் மஞ்சள் தூளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் மஞ்சள் தூள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டமையினாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
பொதுவாக ஒரு கிலோ மஞ்சள் தூள் 500 – 600 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. எனினும் அரசாங்கம் தடை செய்தமையினால் 2500 – 3000 ரூபா வரை மஞ்சள் தூளின் விலை அதிகரித்தது.
Loading...
சமகாலத்தில் இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 6 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது. எனினும் ஆறாயிரம் ரூபாவுக்கும் கடைகளில் மஞ்சள் பெற்றுக் கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மஞ்சள் தூளை கொள்கலன்களில் மறைக்கும் மோசடி நடவடிக்கை ஒன்றும் இடம்பெற்று வருவதாக கூறப்படுகின்றது.
Loading...