உலகின் முன்னணி மின்வணிக நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழும் அமேஷான் ஆனது மொபைல் சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷன்களையும் அறிமுகம் செய்துள்ளமை தெரிந்ததே.
இந்நிறுவனமானது கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் உள்ள ஐபோன் பயனர்களுக்கான புதிய அaப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்திருந்தது.
இந்நிலையில் பழைய அப்பிளிக்கேஷனை எதிர்காலத்தில் ஐபோன்களில் பயன்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் ஏற்கணவே குறித்த அப்பிளிக்கேஷனைப் பயன்படுத்துபவர்கள் தொடர்ந்தும் பயன்படுத்த நேரிடின் அது Amazon India இணையத்தளத்திற்கு கொண்டு செல்லும் எனவும் தெரிவித்துள்ளனர்.
எனவே அனைத்து பயனர்களும் புதிய அப்பிளிக்கேஷனை நிறுவிக்கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
iOS சாதனங்களுக்காக வெளியிடப்பட்டுள்ள புதிய அப்பிளிக்கேஷன் ஆனது 105MB வரையிலான கோப்பு அளவினை கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.