நியுயோர்க் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் இலங்கையில் சமூக வன்முறை அதிகரிப்பதற்கு காரணமாயிருந்தமை தெரிய வந்துள்ளது.
பல்கலைக்கழகத்தின் வணிக மற்றும் மனித உரிமைகளுக்கான மையம் நடத்திய ஆய்வில், உள்ளூர் நிர்வாகிகளின் போதிய நிர்வாகம் (தலையீடு) இன்மை மற்றும் பேஸ்புக் மற்றும் பிற பிரபலமான சமூக வலைப்பின்னல்கள் வன்முறைகளை கட்டுப்படுத்தத் தவறிவிட்டன என்பது தெரியவந்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் திகனவில் குறைந்தது மூன்று பேரைக் கொன்ற தாக்குதலுக்குப் பின்னர், 2018 மார்ச் மாதம் திகனவின் மரணத்தின் அடிப்படையில் பேஸ்புக் நிர்வாகிகள் நிலைமையைக் கட்டுப்படுத்துவதில் தெளிவாகத் தவறிவிட்டதாக ஆய்வு தெரிவிக்கிறது.
இந்த தாக்குதல் பேஸ்புக்கால் கட்டுப்படுத்தப்பட்டிருந்தால் ஆரம்பத்தில் அந்த வன்முறையை கட்டுப்படுத்தியிருக்கலாம் என்று நியுயோர்க் பல்கலைக்கழகம் கூறுகிறது.