Loading...
39 பேருடன் சென்ற ரஷ்ய விமானம் சைபீரியாவில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் காயமடைந்துள்ளனர்.
32 பயணிகள் மற்றும் 7 விமான ஊழியர்களுடன் புறப்பட்ட IL-18 என்ற விமானம், சைபீரியாவின் டிக்சி விமான நிலையத்திலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் விழுந்து விபத்துக்குள்ளானது.
Loading...
இந்த விபத்தில் 16 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், விமானம் மூன்று துண்டாக உடைந்ததாகவும் ரஷ்ய பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது.
மற்றவர்கள் லேசான காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மோசமான வானிலையே விபத்துக்கு காரணம் எனவும் தெரியவந்துள்ளது.
Loading...