வீட்டில் உள்ள பூஜை பாத்திரங்களை மீண்டும் புதியது போல் மின்னச் செய்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.
பெரும்பாலான வீடுகளில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பூஜை அறையில் உள்ள வெள்ளிக் குத்துவிளக்கு மற்றும் வெள்ளி சிலைகளை சுத்தம் செய்வது வழக்கமாக இருக்கும்.
அப்படி அவற்றை சுத்தம் செய்யும் போது, அதனை பளிச்சென்று கொண்டு வர நன்கு சோப்பு பயன்படுத்தி தேய்ப்போம்.
இருப்பினும் அவற்றால் நம் உடலில் உள்ள சக்தி தான் குறையுமே தவிர, வெள்ளிப் பொருட்களானது பளிச்சென்று ஆகாது. ஆனால் வெள்ளிப் பொருட்களை ஒருசில இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி பளிச்சென்று மின்னச் செய்யலாம்.
இங்கு வெள்ளிப் பொருட்களை புதிது போன்று பளிச்சென்று மின்ன செய்யும் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
டூத் பேஸ்ட்
டூத் பேஸ்ட் பற்களை மட்டும் வெண்மையாக்க உதவுவதில்லை, வெள்ளிப் பொருட்களையும் வெண்மையாக்க பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு சிறிது வெள்ளையான டூத் பேஸ்ட்டை கையில் எடுத்து, வெள்ளிப் பொருட்களின் மீது தேய்த்தால், வெள்ளிப் பொருட்கள் மின்னும்.
பேக்கிங் சோடா
பேக்கிங் சோடாவை நீரில் கலந்து பேஸ்ட் செய்து, பின் ஈரமான துணி பயன்படுத்தி வெள்ளிப் பொருட்களை தேய்த்து, வெதுவெதுப்பான நீரில் கழுவி, பின் ஈரமான துணியால் வெள்ளிப் பாத்திரங்களை அழுத்தி துடைக்க வேண்டும்.
எலுமிச்சை
எலுமிச்சை சாறு மற்றும் உப்பு ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றில், 2 டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, அதனைப் பயன்படுத்தி, வெள்ளிப் பாத்திரங்களை தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்து கழுவினால், வெள்ளிப் பாத்திரங்கள் பளிச்சென்று மின்னும்.
ஊறிய புளி
கையில் கரை படாமல்,அழுத்தி தேய்க்காமல் ,அதிக நீரை செலவழிக்காமல் கஷ்டபடாமல் பூஜை பாத்திரங்களை எப்படி சுத்தம் செய்வது என பார்ப்போம். முதலில் விளக்குகளில் எண்ணெய் திரிகளை அகற்றி எண்ணெயை பேப்பர் கொண்டு சுத்தமாக துடைத்திடுங்கள்.பூஜை பாத்திரங்களுக்கென தனியாக ஒரு பிரஷ் வாங்கிக்கொள்ளுங்கள்.
எண்ணெய் கரை உள்ள பகுதிகளில் மட்டும் பாத்திரங்களை துத்தப்படுத்த நாம் பயன்படுத்தும் சோப்பை (vim சோப் ) பிரஷ்ஷில் நனைத்து கரை உள்ள பகுதிகளில் தேய்த்துக்கொள்ளுங்கள்.பின் எலுமிச்சை பழ அளவு புளியை தண்ணீரில் ஊற வைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
ஊறிய புளியை கரைத்து அதன் தோலையும் அதிலேயே சேர்த்து பூஜை பாத்திரங்கள் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து அடுப்பில் அந்த புளித்தண்ணீரை 7 நிமிடம் கொதிக்கவிட்டு அடுப்பை அணைத்திடுங்கள்.பின் அந்த சுடுநீரில் பூஜை பாத்திரங்களை போட்டு 10 நிமிடம் ஊற வைத்து மீண்டும் சுத்தமான நீரில் ஒரு தடவை அலசி எடுத்தால் பூஜை பாத்திரங்கள் பளிச்சென்று மாறியிருப்பதை கண்கூட பார்க்கலாம்.