மேஷம்:
பொருளாதார வசதி நல்லபடியே நீடிக்கிறது கூடுதல் செலவுகள் ஏற்பட்டாலும் அதைச் சமாளித்துவிட முடியும். குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும்போது பொறுமை அவசியம். கணவன் – மனைவி இடையில் பிரச்னை ஏற்பட்டு இருந்தால் இப்போது சரியாகிவிடும்.
அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். ஆனாலும் அதற்கேற்ற சலுகைகளும் கிடைக்கும். மேலதிகாரிகளின் பாராட்டுக்கள் உங்களை உற்சாகம் அடையச் செய்யும்.
வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் தகுந்த எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.
கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தடைகள் ஏற்படக்கூடும். சக கலைஞர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும்.
மாணவ மாணவியர் உடல்நலனில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். வெளியிடங்களுக்குச் செல்லும்போது உணவு விஷயத்தில் கவனம் தேவை. அலர்ஜி ஏற்பட வாய்ப்பு உள்ளது..
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியும் நிம்மதியும் தரும் வாரம் இது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு.
அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: டிசம்பர் 21,22,23,24
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 9, 5, 4
சந்திராஷ்டம நாள்கள்: டிசம்பர் 25 முதல்
முக்கியக் குறிப்பு: டிசம்பர் 19,20,25 ஆகிய தினங்களில் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.
வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி
பரிகாரம்: வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்வது நலம் சேர்க்கும்.
தோடுடைய செவியன் விடையேறி ஓர் தூவெண் மதி சூடி
காடுடைய சுடலைப் பொடிபூசி என் உள்ளம் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனைநான் பணிந்து ஏத்த அருள் செய்த
பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே!
ரிஷபம்:
பொருளாதார நிலை நல்லபடியே இருந்து வருகிறது. ஆனால், தேவையற்ற வீண் செலவுகள் உங்கள் மனதை சஞ்சலப்படுத்தும். கணவன் – மனைவி இடையில் கருத்துவேறுபாடு தோன்றக்கூடும் என்பதால் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்லவும். உடல் நலம் சீராகும்.திருமண முயற்சிகள் நல்லபடி முடியும். பயணங்களின்போது எச்சரிக்கை தேவை.
வேலைக்கு விண்ணப்பம் செய்திருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு சலுகைகள் கிடைக்கும்.
வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். லாபம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் பிரச்னை எதுவும் இருக்காது.
கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் அமைந்தாலும் சூழ்நிலையின் காரணமாக கவனம் செலுத்தமுடியாமல் போகும்.
மாணவ மாணவியருக்கு தேவையற்ற மனக் குழப்பங்கள் உண்டாகும். ஆசிரியரிடமும் பெற்றோரிடமும் மனம் விட்டுப் பேசி தெளிவு பெறுவது அவசியம்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு தேவையற்ற செலவுகள் ஏற்பட்டு மனதை சஞ்சலப்படுத்தும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும்.
அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: டிசம்பர் 21, 23,24
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 4,7
முக்கியக் குறிப்பு: டிசம்பர் 19,20,25 ஆகிய தேதிகளில் வழக்கமான பணிகளையும் கூடுதல் கவனத்துடன் செய்யவும்.
வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்
பரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
ஐந்துகரத்தனை ஆனைமுகத்தனை
இந்தின் இளம்பிறைபோலும் எயிற்றனை
நந்திமகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுவனே
மிதுனம்:
சிறு சிறு உடல்நலக் குறைபாடு தோன்றக்கூடும். உடனுக்குடன் சிகிச்சை செய்துகொள்வது நல்லது. பேச்சிலும் செயலிலும் நிதானமும் பொறுமையும் மிக அவசியம். கணவன் – மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வதால் பாதிப்புகள் எதுவும் ஏற்படாமல் தவிர்க்கலாம்.
அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரமும் அதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும். பதவி உயர்வோ அல்லது ஊதிய உயர்வோ கிடைக்கக்கூடும்.
வியாபாரத்தில் கடையை விரிவுபடுத்துவதற்காக பாடுபடுவீர்கள். அதிக உழைப்பின் காரணமாக அசதியும் சோர்வும் ஏற்பட்டு நீங்கும்.
கலைத்துறையினர் தங்களுக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்வதுடன் சக கலைஞர்களையும் அனுசரித்து நடந்துகொள்வது அவசியம். மாணவ மாணவியர்க்கு பிரச்னை இல்லாத வாரம் இது. படிப்பில் ஆர்வத்துடன் இருப்பீர்கள்.உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படலாம்.
குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் மிகவும் பொறுமையாக இருக்கவேண்டியது அவசியம். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகச் சூழ்நிலை சாதகமாக இருக்கும்.
அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: டிசம்பர் 22,23,24,25
அதிர்ஷ்ட தரும் எண்கள்: 6,9
முக்கியக் குறிப்பு: டிசம்பர் 19,21 ஆகிய தேதிகளில் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்
வழிபடவேண்டிய தெய்வம்: துர்கை
பரிகாரம்: வீட்டுப் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை தினமும் 27 முறை பாராயணம் செய்யவும்.
பைரவி, பஞ்சமி, பாசாங்குசை, பஞ்சபாணி, வஞ்சர்
உயிர் அவி உண்ணும் உயர் சண்டி, காளி, ஒளிரும் கலா
வைரவி, மண்டலி, மாலினி, சூலி, வராஹி – என்றே
செயிர் அவி நான் மறை சேர் திருநாமங்கள் செப்புவரே
கடகம்:
பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். ஆனாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். பிள்ளைகள் வகையில் செலவுகள் ஏற்படும். உஷ்ணத்தின் காரணமாக வயிறுவலி ஏற்பட சாத்தியம் உள்ளது. கணவன் – மனைவி இடையில் பரஸ்பரம் அந்நியோன்யம் அதிகரிக்கும்.
அலுவலகத்தில் நீங்கள் எவ்வளவுதான் உழைத்தாலும் அதற்கேற்ற அங்கீகாரம் கிடைக்காது. சக பணியாளர்களிடம் தேவையான ஒத்துழைப்பு கிடைக்காது. பொறுமையைக் கடைப்பிடிப்பதுதான் எதிர்காலத்துக்கு நல்லது.
வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் திருப்தி தருவதாக இருக்கும். பங்குதாரர்கள் உங்கள் முயற்சிகளுக்கு உதவி செய்வார்கள்.
கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பது தள்ளிப்போகும். பண வசதியும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை
மாணவ மாணவியருக்கு படிப்பில் ஆர்வம் உண்டாகும். விளையாட்டு போட்டிகளில் வெற்றி கிடைக்கும் என்றாலும் சிறு சிறு காயம் ஏற்படக்கூடும் என்பதால் போட்டிகளில் கவனமாக ஈடுபடவும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும் என்பதால் கடன்படவும் நேரும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக அமையும்.
அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: டிசம்பர் 19,20,25
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3,5,6
முக்கியக் குறிப்பு: டிசம்பர் 21,22, 24 ஆகிய தேதிகளில் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. கடன் கொடுக்கவோ வாங்கவோ வேண்டாம்.
வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்
பரிகாரம்: வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்
நமச்சிவாயவே நானறி விச்சையும்
நமச்சிவாயவே நாநவின்று ஏத்துமே
நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே
சிம்மம்:
பொருளாதார வசதி நல்லபடியாக இருக்கும். ஆனால், வாரப் பிற்பகுதியில் சிறிய அளவில் உடல்நல பாதிப்பும் அதன் காரணமாக மருத்துவச் செலவும் ஏற்படும். திருமணத்துக்கு காத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல வரன் அமைந்து மகிழ்ச்சி தரும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.
அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. உங்களுடைய வேலைகளை மற்றவர்களிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது அநாவசிய சிக்கல்களைத் தவிர்க்கும்
வியாபாரத்தில் கடுமையாகப் பாடுபடவேண்டி இருக்கும். அதற்கேற்ற ஆதாயம் கிடைக்கும் என்பதால் உற்சாகமாக இருப்பீர்கள்.
கலைத் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் எதிர்பார்க்கும் அளவுக்கு வருமானம் இருக்காது. சக கலைஞர்களை அனுசரித்துச் செல்லவும்.மாணவ மாணவியர் கடுமையாக உழைத்து படித்தால்தான் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும்.
குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்மணிகள் மற்றவர்களிடம் கவனமாகப் பேசுவது அவசியம். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு சற்று மனச் சோர்வு உண்டாகும்.
அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: டிசம்பர் 21,22,23
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2,4,7
முக்கியக் குறிப்பு: டிசம்பர் 20,24,25 ஆகிய நாள்களில் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும்.
வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியில் பால் வெண்ணீறும்
இனித்தம் உடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே
கன்னி:
வருமானத்துக்கு குறை இருக்காது. மற்றவர்களால் குடும்பத்தில் ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டு கணவன் – மனைவி உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பழைய கடன்களைத் தந்து முடிப்பீர்கள். அவ்வப்போது சிறிய அளவில் ஆரோக்கியக் குறைபாடு உண்டாகக் கூடும்.
வேலைக்கு விண்ணப்பித்து இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். விற்பனைப் பிரதிநிதியாகப் பணி செய்யும் அன்பர்கள் வெளியூர் பயணங்களை மேற்கொள்ளவேண்டி இருக்கும்.
வியாபாரத்தை முன்னிட்டு சிலர் வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ளவேண்டி இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
கலைத் துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் பிரச்னை எதுவும் இல்லை. சக கலைஞர்களை அனுசரித்துச் செல்லவும்.
மாணவ மாணவியரின் நினைவாற்றலும், பாடங்களை உடனே புரிந்துகொள்ளும் திறனும் அதிகரிக்கும்.
பெண்மணிகளில் குடும்பத்தில் மற்றவர்களுடன் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் பணிச் சுமை ஏற்படுவதுடன் எதிர்பார்த்த சலுகையும் கிடைக்கும்.
அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: டிசம்பர் 21,22,23
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2,7
முக்கியக் குறிப்பு: 19,20,24,25 ஆகிய தேதிகளில் வெளியில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவேண்டும். பொருட்கள் களவு போக வாய்ப்பு உள்ளது.
வழிபடவேண்டிய தெய்வம்: ஆஞ்சநேயர்
பரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழே கொடுக்கப்பட்டிருக்கும் சுலோகத்தை 27 முறை பாராயணம் செய்யவும்.
ஶ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வரானனே
துலாம்:
குடும்ப வருமானம் நல்லபடி இருக்கும். எதிர்பார்க்கும் நல்ல செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். சிலருக்கு திருமண முயற்சிகள் பலிதமாகும். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்கவும் வாய்ப்பு உண்டு. வேலைக்கு விண்ணப்பித்து இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். ஏற்கெனவே வேலையில் இருப்பவர்களுக்கு நிர்வாகத்தினரின் ஆதரவு கிடைக்கும்
புதிதாக வியாபாரம் தொடங்க விரும்புபவர்கள் இந்த வாரம் தொடங்கலாம். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும்.
சக கலைஞர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பேச்சில் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.
மாணவ மாணவியை உடன் படிக்கும் நண்பர்களுடன் அளவோடு பழகவும். பாடங்களில் தீவிர கவனம் செலுத்தவேண்டியது அவசியம்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு நிம்மதியான வாரம். வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் பணிகளைப் பொறுப்பாகச் செய்வது நல்லது.
அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: டிசம்பர் 21,22,23
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2,3,9
முக்கியக் குறிப்பு: டிசம்பர் 19,24,25 ஆகிய தேதிகளில் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும் என்பதால், புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.
வழிபடவேண்டிய தெய்வம்: ஶ்ரீமஹா விஷ்ணு
பரிகாரம்: தினமும் காலை வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
பச்சைமாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா! அமரரேறே! ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமாநகருளானே
விருச்சிகம்:
குடும்பத்தில் அடிக்கடி அமைதிக் குறைவான சம்பங்கள் நிகழக்கூடும். வரவுக்கேற்ற செலவுகளும் இருக்கும். கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேருவதற்கான வாய்ப்பு உண்டாகும். பயணங்களின் காரணமாக மனதில் உற்சாகம் பிறக்கும்.
அலுவலகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.சக பணியாளர்களும் இணக்கமாகப் பழகுவார்கள்.
வியாபாரத்தில் புதிய முயற்சிகள் எதுவும் இப்போது வேண்டாம். மற்றபடி பாதிப்பு இல்லை. எதிர்பார்த்ததை விடவும் லாபம் குறைவாகவே கிடைக்கும்.
கலைத் துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதிலும், வருமானத்துக்கும் குறைவே இருக்காது.
மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் குறைந்து காணப்பட வாய்ப்பு உண்டு என்பதால், மனதை ஒருமுகப்படுத்தி பாடங்களைப் படிப்பது அவசியம்.
குடும்ப நிர்வாகத்தை கவனித்து வரும் பெண்மணிகள் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சில சலுகைகள் கிடைக்கும்.
அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: டிசம்பர் 19, 21,22,24
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1,2,5
முக்கியக் குறிப்பு: டிசம்பர் 25-ம் தேதி கடன் வாங்குவதைத் தவிர்க்கவும்.
வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை
பரிகாரம்: வீட்டுப் பூஜையறையில் விளக்கேற்றி வைத்து கீழ்க்காணும் பாடலை தினமும் 27 முறை பாராயணம் செய்யவும்.
இல்லாமை சொல்லி ஒருவர்தம்பால் சென்று இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல் நித்தம் நீடுதவம்
கல்லாமை கற்ற கயவர்தம்பால் ஒருக்காலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே
தனுசு:
உடல் ஆரோக்கியம் மேம்படும். வருமானத்துக்குக் குறைவு இல்லை. ஒருசிலருக்கு சகோதர வகையில் மனவருத்தம் உண்டாகக்கூடும். குடும்பம் மற்றும் தொழில் தொடர்பான முடிவுகளை எடுப்பதில் நன்றாக ஆலோசிக்கவேண்டியது அவசியம். அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரித்தாலும் அதற்கேற்ப சலுகைகளும் கிடைக்கும். விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.
வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். வேலையாட்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.
கலைத் துறையினர் தங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளை தவறாமல் பயன்படுத்திக் கொள்வது அவசியம். மாணவ மாணவியர் கடுமையாக உழைத்துப் படித்தால்தான் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மனதில் இனம் தெரியாத ஒரு விரக்தி உண்டாகும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சக பணியாளர்களால் நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கும்.
அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: டிசம்பர் 19,20,21,23
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 9,1,6
முக்கியக் குறிப்பு: டிசம்பர் 24,25 ஆகிய தேதிகளில் வாக்குவாதங்களால் பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.
வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்
பரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான்
விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினார் கண்ணிற் பணிமின் கனிந்து
மகரம்:
பணவரவு திருப்திகரமாக இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் சாத்தியம் உள்ளது. சகோதர வகையில் மனத்தாங்கல் ஏற்பட்டு கஷ்டப்பட நேரும். வாரப் பிற்பகுதியில் வீடு மனை வாங்கும் முயற்சிகள் சாதகமாகும். அலுவலகத்தில் கடுமையாக உழைத்தாலும் நல்ல பெயர் கிடைக்கும் என்று சொல்லமுடியாது. அலுவலகப் பணிகளை கவனமாகச் செய்யவும். சிறிய தவறுகூட பாதிப்பை ஏற்படுத்தலாம்.
வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பழைய கடன்கள் தீரும். கலைத்துறை அன்பர்களுக்கு போதிய வருமானம் கிடைக்கும் என்றாலும் புதிய வாய்ப்புகள் வருவதற்கான வாய்ப்பு குறைவே. மாணவ மாணவியருக்கு தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். விரும்பிய பாடப் பிரிவில் சேர முடியும்.
குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்மணிகளுக்கு சற்று சிரமமான வாரம் என்றே சொல்லவேண்டும். வேலைக்குச் செல்லும் பெண்கள் வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும்.
அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: டிசம்பர் 21,22,23
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3,4,7
முக்கியக் குறிப்பு: டிசம்பர் 19,20 24 ஆகிய தேதிகளில் அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது அவசியம். தேவையற்ற பிரச்னைகள் ஏற்படும்.
வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை
பரிகாரம்: வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை தினமும் பாராயணம் செய்யவும்.
வையம் துரகம் மதகரி மாமகுடம் சிவிகை
பெய்யும் கனகம் பெருவிலை ஆரம் – பிறை முடித்த
ஐயன் திருமனையாள் அடித்தாமரைக்கே – அன்பு முன்பு
செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே
கும்பம்:
உங்களுக்குச் சற்றும் தொடர்பு இல்லாத விஷயங்களை நினைத்து மனதை வருத்திக் கொள்வீர்கள். பண வரவு போதுமான அளவு இருக்கும். செலவுகளும் கட்டுக்குள் இருக்கும். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். சிரமமான நேரங்களில் நண்பர்கள் உதவி செய்வார்கள்.
அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு இடமாற்றம், பதவி மாற்றம் கிடைக்கும் என்றாலும் அதனால் நன்மையே நடக்கும்.
வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி இணக்கமான சூழ்நிலை உண்டாகும். கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் வரும் என்றாலும் அதனால் போதிய வருமானம் வருவதற்கில்லை.
மாணவ மாணவியர் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டிய காலம். சக மாணவ மாணவியரிடம் அளவோடு பழகவும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு திருப்திகரமான வாரம். வேலைக்குச் சென்று வரும் பெண்களுக்கு சற்று சோர்வு ஏற்படக்கூடும்.
அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: டிசம்பர் 19,23,24,25
சந்திராஷ்டம நாள்கள்: டிசம்பர் 20,21,22
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3,4
முக்கியக் குறிப்பு: டிசம்பர் 20,21,22 ஆகிய தேதிகளில் எல்லா விஷயங்களிலும் எச்சரிக்கையாக இருப்பதுடன், முக்கிய முடிவுகள் எடுக்கும்போது நன்கு ஆலோசித்து எடுக்கவும்.
வழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான்
பரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!
மீனம்:
குடும்பத்தில் கணவன் – மனைவி இடையில் சிறுசிறு மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். ஒருவரை ஒருவர் அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவ செலவுகளும் உண்டாகும். பணவரவு கூடுதலாக இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். புதிய முயற்சிகள் எதிலும் இறங்கவேண்டாம். வேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். மேலதிகாரிகளை அணுகும்போது எச்சரிக்கையாக இருக்கவும்.
வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் கருத்துவேறுபாடி ஏற்பட்டு பிரிவு உண்டாகும். பற்று வரவு விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.
கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தாலும் அதைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளமுடியாதபடி சில தடைகள் உண்டாகும்.
மாணவ மாணவியருக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். பாடங்களில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பில் உள்ள பெண்மணிகள் பொறுமையாக இருக்கவேண்டிய வாரம். வேலைக்குச் சென்று வரும் பெண்களுக்கு நிம்மதியான வாரம்.
அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: டிசம்பர் 19,20,21,22
சந்திராஷ்டம நாள்கள்: டிசம்பர் 23,24,25
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2,4,6
முக்கியக் குறிப்பு: டிசம்பர் 23,24,25 ஆகிய நாள்களில் அலுவலகத்தில் சில பிரச்னைகளை எதிர்கொள்ள நேரும் என்பதால் பொறுமை மிக அவசியம்.
வழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான்