இயக்குனர் அருண் பிரசாத் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த பத்ரி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.
இந்த படத்தில் விஜய், பூமிகா, பூபேந்திர சிங், விவேக் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இதில் வில்லனாக ரோஹித் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் பூபேந்திர சிங்.
இந்நிலையில் பூபேந்திர சிங் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் விஜய் குறித்து சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
தற்போது வயதானவர் போல் காட்சியளிக்கும் பூபேந்தர் சிங் தளபதி விஜய்யின் 46 வது பிறந்தநாளுக்கும் வாழ்த்து தெரிவித்திருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் பத்ரி வில்லனா இது என்று அதிர்ச்சியடைந்துள்ளனர். அந்தளவு ஆளே மாறி அடையாளம் தெரியாமல் ஆகிவிட்டார். இதேவேளை, அவரின் புகைப்டத்தினையும் தற்போது வைரலாக்கி வருகின்றனர்.