பிரித்தானியாவில் முதன்முறையாக Leicester நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்றிலிருந்து மக்கள் தேவையில்லாத பயணங்களை தவிர்க்கவும், அத்தியாவசியமற்ற கடைகளை அடைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களில் பிரித்தானியாவின் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கையில் 10 சதவிகிதம் Leicester நகரில் இருந்து வந்தமையால் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மக்கள் வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதுடன், வெளி நகரங்களிலிருந்து Leicesterக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த ஊடரங்கு இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் பிரித்தானியாவில் மொத்தம் 36 இடங்களில் கொரோனா வைரசின் பரவில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.