தமிழ் மொழி மீதான அதீத பற்று காரணமாக 64 வயதான சிங்கள முதியவர் ஒருவர் கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
பலாங்கொடை பகுதியை சேரந்த எம்.சமரதுங்க என்ற முதியவரே இவ்வாறு பரீட்சைக்கு தோற்றியுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தமிழ் மொழி மீது கொண்டுள்ள அதீத பற்று காரணமாகவே, குறித்த முதியவர் இம்முறை கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, சிங்களவர்களுக்கு இரண்டாம் மொழியாக பதிவாகியுள்ள தமிழ் மொழி பரீட்சைக்கு எம்.சமரதுங்க இம்முறை தோற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, 1971ஆம் ஆண்டு முதன் முறையாக சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய சமரதுங்க, 6 பாடங்களில் 3 சித்திகளை பெற்றுக்கொண்ட நிலையில், 1972ஆம் ஆண்டு இரண்டாவது முறையாகவும் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டாவது முறையாக பரீட்சை எழுதிய அவர், நான்கு சாதாரண சித்திகளை பெற்றுக் கொண்ட நிலையில், இலங்கை போக்குவரத்து சபை ஊழியராகவும் கடமையாற்றி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.