பாகுபலி படத்தில் நடிக்க உயிரைக் கொடுப்பேன், தேவைப்பட்டால் கொலையும் செய்வேன் என நடிகை தமன்னா தெரிவித்துள்ளார். கோலிவுட், பொலிவுட், டோலிவுட் படங்களில் நடித்து வரும் தமன்னாவின் மார்க்கெட் சரிந்தபோது தான் அவருக்கு எஸ். ராஜமவுலியின் இயக்கத்தில் பாகுபலி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இந்நிலையில் பாகுபலி பற்றி தமன்னா கூறுகையில்,
என் கெரியர் மிகவும் மோசமாக இருந்த நேரத்தில் பல தோல்விகளை சந்தித்த நேரத்தில் பாகுபலி படத்தில் நடிக்கும் வாய்ப்பு என்னை தேடி வந்தது. அது ஒரு கனவு போன்று இருந்தது.
பாகுபலி பட வாய்ப்பு நான் எதிர்பாராதது. என் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது. பாகுபலி இரண்டாம் பாகத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறேன்.
பாகுபலி 2 படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் முடிந்துவிடும். பாகுபலி படத்தில் நடிக்க உயிரைக் கொடுப்பேன். ஏன் தேவைப்பட்டால் கொலையும் செய்வேன் என தெரிவித்துள்ளார்.
பாகுபலி 2 படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 28ம் திகதி ரிலீஸாக உள்ளது. படத்திற்காக பிரபாஸ், ராணா, அனுஷ்கா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் என அனைவரும் கடினமாக உழைத்து வருகின்றனர்.