Loading...
கிரகங்களில் சுப கிரகமான குரு, நம் ராசியைப் பார்த்தால் கோடி நன்மை கிடைக்கும். அதே நேரம் அதிகாலையில் சூரியனை நாம் நேரில் பார்த்து வழிபட்டால், கண்நோய் தீரும்; காரிய வெற்றியும் கிடைக்கும்.
அதனால் தான் நம் முன்னோர்கள் சூரிய நமஸ்காரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். அதிகாலையில் சூரியனின் 12 திருப்பெயர்களையும் சொல்லி, 12 முறை விழுந்து வணங்குங்கள்.
Loading...
கிழக்கு திசை பார்த்து ‘ஓம் நமோ ஆதித்யாய புத்திர்பலம் தேஹிமே!’ என்று மூன்று முறை சொல்லுங்கள். இங்ஙனம் செய்வதன் மூலம் கண் பார்வை அதிகரிக்கும். இதயம் பலப்படும். சரும நோய்கள் நீங்கும். அறிவு வளம் பெருகும்.
Loading...