உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தளர்வுகளுடன் பொது முடக்கம் அமலில் இருக்கிறது.
இந்தப் பொது முடக்கக் காலத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் விலங்குகளின் சேட்டை மிகுந்த வீடியோக்கள் மக்களை பெரும்பாலும் மகிழ்வித்து வருகின்றன.
அந்த வகையில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் அமைந்துள்ள பிக் பெண்டு தேசியப் பூங்காவில் வீடியோ ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.
41 வினாடிகள் ஓடும் இந்த வீடியோவில், இரண்டு கரடிக் குட்டிகள் முட்டி மோதி, எழுந்து புரண்டு மல்யுத்தம் போன்ற விளையாட்டில் ஈடுபடுகிறது. இதைச் சற்றும் கண்டு கொள்ளாமல் ஒரு பெரிய கரடி ஓரத்தில் நின்றிருக்கிறது.
கடைசியாக வீடியோ முடியும்போது, நான்காவதாக ஒரு கரடி இருப்பது தெரிகிறது. அது ஒரு சின்னக் கரடிக் குட்டி. இந்த இரு கரடிகளின் சண்டையைப் பார்த்து அரண்டு போய் அது ஒரு ஓரமாகப் பதுங்கியிருக்கிறது. இந்தச் சம்பவத்தின் வீடியோ வைரலாகி பலரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கிறது.
One of the greatest things that has happened as a result of this pandemic is these black bears wrasslin' on the patio of Big Bend National Park basin lodge because all the humans are gone pic.twitter.com/rWkqqzjN1b
— Joe ? Hanson (@DrJoeHanson) June 28, 2020