லண்டனில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் 5 வயது ஈழத்து சிறுமி சாயகி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில் வழக்கை விசாரித்துவரும் ஜஸ்டின் ஹொவிக் கூறுகையில், சாயகியை கத்தியால் குத்தியது அவரது அம்மா தான் என்றும். அவரை தாம் பொலிஸ் காவலின் கீழ், வைத்தியசாலையில் வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
குற்றச் செயல் நடைபெற்ற போது, அல்லது அதன் பின்னர் எவராவது தகவல் அறிந்திருந்தால், அல்லது இது தொடர்பாக தெரிந்திருந்தால் தம்மை உடனே தொடர்பு கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
100% விகிதம் ரகசியம் காக்கப்படும் என்ற உறுதியும் வழங்கப்பட்டுள்ள நிலையில், பொலிசார் முழு அளவில் இந்த விசாரணையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
அத்துடன் ஸ்காட்லன் யாட் பொலிசாரின் ஹோசைட் பிரிவு என்று அழைக்கப்படும், கொலை வழக்குகளை விசாரிக்கும் பிரத்தியேக பிரிவினர் இந்த வழக்கை விசாரிக்க ஆரம்பித்துள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.