கருணாவின் கையில் ஆட்சி, அதிகாரம், அமைச்சு பதவி இருந்த போது அம்பாறை தமிழ் மக்களுக்கு என்ன செய்திருக்கிறார்? என அம்பாறை மாவட்ட சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தற்போது தேர்தலுக்காக அம்பாறை மக்களிடத்தில் பொய் கூறி வாக்கு சேகரிக்கும் நடவடிக்கையில் அவர் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மட்டக்களப்பை அபிவிருத்தி செய்தேன் அதை கட்டினேன், இதைகட்டினேன் என்றெல்லாம் கூறும் கருணா எதையும் கட்டவில்லை என்றும், தனது ஊரையே அபிவிருத்தி செய்யமுடியாதவரா அம்பாறையை அபிவிருத்தி செய்து சிங்கப்பூராக மாற்றப்போகிறாரா? எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதை எல்லாம் அம்பாறை மக்கள் சிந்திப்பது இல்லையா ? என கூறிய சமூக ஆர்வலர்கள், இனி வரும் காலத்தில் மக்களிடம் பொய்கூறி வாக்குபெற்று பாராளுமன்ற உறுப்பினராகி அபிவிருத்தி செய்ய போகிறாரா என்றும் கூறியுள்ளனர்.
அத்துடன் கடந்த காலங்களில் கருணா மீள்குடியேற்ற பிரதியமைச்சாராக இருந்த போது, மணலாறு என்னும் தமிழ் கிராமத்தை வெலி ஓயா என்னும் சிங்கள பெயராக மாற்றப்பட்டு இருந்ததையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதுமட்டும் அல்லாமல் , மணலாற்றில் இருந்த மொத்த தமிழர்களையும் வெளியேற்றி விட்டு, அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள சிங்கள குடும்பங்களை அங்கு கொண்டு வந்து வீடு கட்டி கொடுத்ததுடன் , ஒரு தமிழ் கிராமத்தை சிங்கள கிரமாக மாற்றியதும், நாமல் கம என்னும் சிங்கள கிராமத்தை உருவாக்கிய பெருமையும் கருணாவையே சாரும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கருணா பொறுத்தவரை எப்போதுமே சிங்கள அரசியல்வாதிகளை மகிழ்ச்சி படுத்துவதே அவருக்கு முக்கியமானதாக உள்ளதாகவும், இந்த நிலையில் அம்பாறை மாவட்டத்தில் ஒரு வாக்கேனும் கருணாவுக்கு கிடைத்தால், அது ஒட்டு மொத்த அம்பாறை மாவட்ட தமிழர்களுக்குமே அவமானம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே கருணாவின் பொய்பேச்சில் ஏமாந்த கூட்டம் அம்பாறை தமிழர்கள் தான் என வரலாற்றில் இடம்பிடிக்காதீர்கள் எனவும் அவர்கள் அம்மாறை தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் முன்னாள் பிரதி கருணாவிற்கு நீங்கள் போட்ட மாலையும், நீங்கள் கொழுத்திய வெடியும் வீணானவை என்று வருந்தும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை மறக்க வேண்டாம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.