பலங்கொட பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
என்னால் படிக்க முடியவில்லை என கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு 16 வயதுடைய மாணவி ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
இதேவேளை அவர் இவ்வருடம் சாதாரண தர பரீட்சை எழுதவிருந்தார் என தெரியவந்துள்ளது.
இந்த தற்கொலை தொடர்பில் வாக்குமூலம் வழங்கிய மாணவியின் தந்தை,
“சம்பவ தினத்தன்று நானும், மனைவியும் எனது மகனும் எனக்கு மருந்து பெற்றுக் கொள்வதற்காக பின்னவல வைத்தியசாலைக்கு சென்றோம்.
மகள் இம்முறை சாதாரண பரீட்சை எழுதவுள்ளமையினால் வீட்டில் இருந்து படிக்குமாறு கூறினேன். எனினும் அவர் தொலைக்காட்சி பார்ப்பதற்கு அடிமையாகியுள்ளார். இதனால் பல முறை எச்சரித்துள்ளதாக தெரிவித்தார்.
தொலைக்காட்சி அன்டனா வயர்களை அகற்றிவிட்டு படிக்குமாறு மகளுக்கு கூறினோம். இதனால் இரண்டு நாட்கள் அவர் அழுதுகொண்டே இருந்தார். நாங்கள் 12.30 மணியளவில் வீட்டிற்கு வரும் போது மகள் தரையில் படுத்திருந்தார்.
அவரது வாயிலிருந்து விஷ மருந்து நாற்றம் வீசியது. உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றோம் எனினும் அவரை காப்பாற்ற முடியவில்லையென பொற்றோர் தெரிவித்துள்ளனர்.
என்னால் படிக்க முடியாது.. நான் இன்று உயிரிழப்பேன்.. பாய்.. என குறிப்பிட்ட கடிதம் ஒன்றும் அறையில் கண்டுபிடிக்கப்பட்டது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.