Loading...
ஹெரோயின் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
Loading...
70 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சுன்னாகம் பொலிஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர் பொலிஸாருக்கு தெரியாமல் பொலிஸ் நிலையத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
Loading...