5 மணி நேரத்திற்கும் அதிக காலம் தனது கையடக்க தொலைபேசியில் வீடியோ விளையாட்டு விளையாடிக் கொண்டிரு்தவர் நபர் ஒருவர் மூளையின் நரம்பு வெடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கொழும்பு, கிரான்ட்பாஸ் பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,
குறித்த நபர் கடந்த 29ஆம் திகதி இரவு 9 மணி முதல் அதிகாலை 2 மணி வரை அறையில் தனது கையடக்க தொலைபேசியில் விளையாடிக் கொண்டிருந்த போது இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மரணம் தொடர்பில் திடீர் மரண பரிசோதகர் இரேஷா தேஷானி முன்னால் இடம்பெற்ற மரண பரிசோதனையின் போதே உயிரிழந்தவரின் மனைவி ஆனந்தன் தர்ஷிகா என்பவரே இவ்வாறு சாட்சியளித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,,
எங்களுக்கு ஒரு பிள்ளை உள்ளது. கணவர் வர்த்தகர். எனக்கு தெரிந்த அளவில் அவருக்கு அல்சர் வருத்தத்தை தவிர வேறு எந்த ஒரு நோயும் இல்லை.
இரவு 9 மணியளவில் தனது கையடக்க தொலைபேசியில் விளையாடி கொண்டிருந்ததனை நான் அவதானித்தேன்.
அதனை நிறுத்தி விட்டு உறங்குமாறு நான் கூறினேன். அதை கேட்காமல் விளையாடிக் கொண்ணடிருந்தார்.
அடுத்த நாள் அதிகாலை இரண்டு மணியளவில் திடீரென சத்தம் ஒன்று கேட்டு அங்கு சென்று பார்த்த போது மூக்கு, வாயில் இரத்தம் வடிந்த நிலையில் கணவர் விழுந்து கிடந்தார். உடனே அம்பியுலன்ஸ் வண்டிக்கு அழைப்பேற்படுத்தி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் 5 மணி நேரத்திற்கும் அதிகமாக தொலைபேசியில் விளையாடியமையினால் அதிக இரத்த அழுத்தம் ஏற்பட்டு மூளை நரம்பு வெடித்தமையினால் அவர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டதாக உயிரிழந்தவரின் மனைவி சாட்சியம் அளித்துள்ளார்.