Loading...
சூரியனின் கதிர்கள் அளவுக்கு அதிகமாக நமது சருமம் மற்றும் முடியின் மீது படுவதால், கோடைக் காலங்களின் அதிகமாக சருமப்பிரச்சனை மற்றும் முடி உதிர்வு பிரச்சனைகள் ஏற்படுகிறது.
மேலும் அதிகமாக கவலைப்படும் போது அல்லது அதிகமாக யோசிக்கும் போதும் முடி உதிர்தல் பிரச்சனை இருக்கும்.
Loading...
எனவே பெண்களின் அழகு தொடர்பான முடி உதிர்வு பிரச்சனைகளை தடுப்பதற்கு, இயற்கையில் பல சூப்பரான வழிகள் உள்ளது.
முடி உதிர்வை தடுப்பது எப்படி?
- முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்து தலையில் தேய்த்து, ஊறவைத்து சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இதேபோல் மாதம் இரண்டு முறை குளித்து வந்தால் கூந்தல் பளபளப்பாக இருப்பதுடன் முடி உதிர்வையும் தடுக்கலாம்.
- முடி உதிர்வதை தடுப்பதற்கு, அயன், விட்டமின்கள் அதிகமாக நிறைந்த உணவு வகைகளை தினமும் சாப்பிட்டு வர வேண்டும் மேலும் தலைக்கு எண்ணெய் பசையை ஏற்படுத்துவதற்கு, தினமும் தேங்காய் எண்ணெய்யை தேய்த்து வர வேண்டும்.
- நல்ல எண்ணெயில் இரண்டு மிளகு, பூண்டு ஆகிய இரண்டையும் சேர்த்து சிறுது நேரம் குறைந்த தீயில் காயவைத்து, பின் தலையில் தடவி, சீயக்காய் போட்டு குளித்து வந்தால், உடலின் சூடு குறைந்து முடி உதிர்வதும் தடுக்கப்படுகிறது.
- கறிவேப்பிலை மற்றும் மருதாணி ஆகிய இரண்டையும் அரைத்து, தலையில் தேய்த்து, மாதம் இரண்டு முறை குளித்து வந்தால், இளமையில் ஏற்படும் நரைகள் மற்றும் முடி முதிர்வு போன்ற பிரச்சனையை தடுக்கலாம்.
- வேப்பிலை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, நீரில் வேகவைத்து, பின் ஒரு நாள் கழித்து வேகவைத்த அந்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால், உடனே முடி உதிர்வு நின்று விடும்.
- கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் போன்ற காய்களை பொடி செய்து, அதை ஒன்றாக சேர்த்து, தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து, பின் காலையில் அதனுடன் எலுமிச்சை பழச்சாறு கலந்து, தலையில் தேய்த்து குளித்து வந்தால், முடி உதிரும் பிரச்சனை ஏற்படாது.
- வெந்தயம் மற்றும் குன்றிமணி ஆகியவற்றின் பொடி செய்து, தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து, பின் ஒரு வாரம் கழித்து, அதை தினமும் தலையில் தேய்த்துக் குளித்து வர வேண்டும்.
Loading...