அமெரிக்காவில் கொரோனா தொற்று உச்சத்தில் இருக்கும் நிலையிலும் வெள்ளை மாளிகையில் சுதந்திர தின விழாவினை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நடத்தி முடித்துள்ளார்.
இதில் கொரோனாவுக்கு எதிராக களத்தில் போராடி வரும் நூற்றுக்கணக்கான வைத்தியர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
இவ்விழாவில் இராணுவ விமானங்களின் சாகசங்கள், வானவேடிக்கைகள் மற்றும் ஜனாதிபதியின் உரை ஆகியவை இடம்பெற்றுள்ளன.
தீவிரமாக கொரோனா பரவ வாய்ப்புள்ளதாக வோஷிங்டன் மேயர் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இதை மீறி நடக்கும் இந்த விழாவில் பங்கேற்பதற்காக வெள்ளை மாளிகைக்கு வெளியே பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர்.
இங்கு சமூக இடைவெளி பின்பற்றவில்லை என்பதுடன் முகக் கவசமும் அணியப்படவில்லை.
இந்த விழா கொரோனாவால் ஏற்படும் பேரழிவுக்கு வித்திட வாய்ப்புள்ளதாக வோஷிங்டன் மேயர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.