இலை, விதை, பூ, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்ட கல்யாண முருங்கை மரங்கள் எங்கும் அதிகமாக காணப்படுகின்றன. இதுதவிர நகர்ப் பகுதிகளிலும் சில சில பகுதிகளில் கல்யாண முருங்கை மரங்கள் உள்ளன.
இந்த மர இலைகளுடன் பச்சரிசி, சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், ஆடாதொடா இலை போன்றவற்றையும் சேர்த்து அரைத்து வடை, அடை போன்ற உணவுகளாக செய்து சாப்பிட்டு வருகிறார்கள்.
மேலும் இந்த இலையுடன் முருங்கை இலை, பூண்டு, மிளகு வைத்து சூப் செய்தும் குடிக்கிறார்கள். இதனால் சளி, இருமல் பிரச்சினைகள் உடனுக்குடன் சரியாகின்றன.
இதுதவிர காய்ச்சல், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் போன்றவற்றுக்கும் அருமருந்தாக கல்யாண முருங்கை இலைகள் உதவுகின்றன.
மேலும் பெண்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல் சார்ந்த பிரச்சினைகளுக்கும் இந்த இலைகள் தீர்வு கொடுக்கும் வரப்பிரசாதமாகவும் அமைகின்றன.
இந்த நிலையில், தற்போது கொரோனா பீதி காரணமாக நோய் எதிர்ப்புச்சக்தி அதிகம் நிறைந்திருக்கும் கல்யாண முருங்கை மக்கள் அலைமோதி வாங்க ஆரம்பித்து விட்டனர்.
சூப்பர் மார்க்கெட்டுகளில் கூட இந்த இலைகள் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.