சச்சினின் 100 சதங்கள் என்ற சாதனையை விராட் கோஹ்லியால் முறியடிக்க முடியும் என முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.
ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் விளாசிய ஒரே வீரர் இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர், அவர் டெஸ்டில் 51 சதங்களும், ஒரு நாள் போட்டியில் 49 சதங்களும் அடித்துள்ளார்.
தெண்டுல்கரின் சாதனையை தற்போது 70 சதங்களுடன் (டெஸ்டில் 27 சதம், ஒரு நாள் போட்டியில் 43 சதம்) உள்ள இந்திய கேப்டன் விராட் கோலியால் முறியடிக்க முடியுமா? என்று ரசிகர் ஒருவர் பிராட் ஹாக்கிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த ஹாக், நிச்சயம் முடியும், ஏனெனில் வீரர்களின் உடல்தகுதி பராமரிப்பு சிறப்பாக உள்ளது, இதற்காக நிபுணர்களும் உதவுகின்றனர்.
கிரிக்கெட் வாரியமே சிறந்த நிபுணர்களையும், டாக்டர்களையும் வைத்திருக்கிறது, சிறிய காயம் என்றாலே வீரர்கள் சுதாரித்துவிடுகிறார்கள்.
இதுமட்டுமின்றி தற்போதைய காலத்தில் அதிக போட்டிகள் நடக்கின்றன, இதை எல்லாம் வைத்து நிச்சயம் கோஹ்லியால் சாதனை படைக்க முடியும் என தெரிவித்துள்ளார்.