தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி அதிமுக கட்சியின் அடுத்த பொது செயலாளராக பதவியேற்க அதிமுக மூத்த நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் சசிகலாவை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
அதே நேரத்தில் அதிமுக தொண்டர்களில் பெரும்பாலானோருக்கு அவர் பொது செயலாளர் ஆவது பிடிக்கவில்லை என்ற செய்தியும் கூறப்பட்டு வரும் நிலையில் இன்னொரு அதிர்ச்சியான விடயம் தற்போது தெரியவந்துள்ளது.
எந்தவொரு கட்சிக்கும் உறுப்பினராக இருந்தால் உறுப்பினர் அடையாள அட்டை கட்சி தலைமை மூலம் வழங்கப்படும்.
இந்த அதிமுக அடையாள அட்டையே சசிகலாவுக்கு கிடையாதாம்! ஜெயலலிதா அவருக்கு அந்த உறுப்பினர் அட்டையே வழங்கவில்லை என கூறப்படுகிறது.
உறுப்பினர் அட்டையே இல்லாத ஒருவர் கட்சியின் பொது செயலாளராக எப்படி ஆக முடியும் என சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்
ஜெயலலிதா இறப்பதற்கு முன்னர் கலந்து கொண்ட கட்சியின் பொது கூட்டத்தில் அதிமுகவில் சேர்ந்த பிரபல நடிகை நமீதாவுக்கு கூட அவர் கையாலேயே அடையாள அட்டை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.