பிரித்தானியாவில் சனிக்கிழமை முதல் மதுபான விடுதிகள் திறந்து செயல்பட்டு வரும் நிலையில், முன்னாள் அரசு ஆலோசகர் ஒருவர் அரசுக்கு கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
பிரித்தானியாவில் மதுபான விடுதி உரிமையாளர்கள், வாடிக்கையாளர்களுக்கு விடுதியின் உள்ளே மது அருந்த அனுமதி அளிக்கும் முடிவை கைவிட வேண்டும் எனவும்,
இல்லையெனில் இன்னொரு 27,000 பேர் கொரோனாவால் இறக்க நேரிடும் என அவர் கடுமையாக எச்சரித்துள்ளார்.
போரிஸ் அரசாங்கத்தின் முன்னாள் ஆலோசகரான சர் டேவிட் கிங் என்பவரே தற்போது இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளவர்.
நோய்த்தொற்றின் வீதத்தை பூஜ்ஜியமாகக் குறைப்பதில் கவனம் செலுத்துமாறு டேவிட் கிங் அமைச்சர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்,
அல்லது பல்லாயிரக்கணக்கான இறப்புகளை பிரித்தானியா மீண்டும் எதிர்கொள்ளும் ஆபத்து இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், புதிய நோய்த்தொற்றுகளின் வீதத்தை கிட்டத்தட்ட முற்றிலும் தடுக்க முடியும் மட்டுமின்றி அரசின் தற்போதைய கொள்கைகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் சர் டேவிட் சாடியுள்ளார்.
பிரித்தானியாவில் இதே நிலை நீடித்தால் இப்போது மற்றும் அடுத்த ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் 27,000 அதிகப்படியான இறப்புகள் ஏற்படக்கூடும் என்பது கண்கூடானது என்றார் சர் டேவிட்..
மதுபான விடுதிகள் கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், மட்டுமின்றி விடுதிக்கு உள்ளே மதுப்பிரியர்களை அனுமதிக்கவே கூடாது என கண்டிப்புடன் தெரிவித்துள்ளார் சர் டேவிட் கிங்.