Loading...
கிளிநொச்சி மாவட்டத்தில் அமைக்கப்படவிருக்கும் பொருத்து வீட்டுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தினால் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் பொதுமக்களின் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்று வருகின்றது.
இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில் பெருந்தொகையான மக்கள் கலந்துகொண்டு பொருத்து வீட்டுத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
Loading...
‘வேண்டாம் வேண்டாம் பொருத்து வீடு வேண்டாம்’, ‘விளையாடாதே விளையாடாதே வீட்டுத்திட்டத்தில் விளையாடாதே’, ‘குசினியில்லா வீடெதற்கு’, போன்ற பதாகைகளை ஏந்தியவண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Loading...