Loading...
அமெரிக்காவில் கடந்த 8-ந் தேதி நடந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். ஜனாதிபதி தேர்தலில் மக்கள் ஓட்டுகளை அதிகம் பெற்று வெற்றி பெறுபவர், மாநிலங்களில் உள்ள தேர்தல் சபை ஓட்டெடுப்பிலும் வெற்றி பெற வேண்டும்.
Loading...
இந்த நிலையில் தேர்தல் சபை உறுப்பினர்களின் கூட்டம் நேற்று நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படுவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 538 பிரதிநிதிகளை கொண்ட இந்த கூட்டத்தில் 270 பேரின் வாக்குகளை டிரம்ப் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...