2020ம் ஆண்டின் மிகப்பாரிய விண்கல் ஒன்று பூமிக்கு மிக அருகில் வந்து சென்ற சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக முக்கியமான விவரங்கள் வெளியாகி உள்ளது.
பூமிக்கு அருகே அவ்வப்போது விண்கல் அடிக்கடி வந்து செல்வது வழக்கம். பூமிக்கு அருகில் வந்தாலும் மிக நெருக்கமாக இந்த விண்கல்கள் வந்தது இல்லை. அதோடு பூமி மீது மோதியதும் இல்லை.
இதெல்லாம் போக இந்த விண்கல் பூமிக்கு அருகே வருவதற்கு முன்னே அதை கண்டுபிடிக்கும் நிகழ்வுகளும் நடந்து இருக்கிறது. இதனால் உலகம் எப்போதும் விண்கல் தாக்குவதற்கு தயாராகவே இருந்துள்ளது.
ஆனால் அதிரடி திருப்பமாக 2020ம் ஆண்டின் மிகப்பெரிய விண்கல் ஒன்று பூமிக்கு மிக அருகில் வந்து சென்ற சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விண்கல் மொத்தம் 60826 மைல்கல் / நேரம் வேகத்தில் பூமியை கடந்து சென்றுள்ளது. கடந்த 5ம் திகதி இந்த விண்கல் பூமியை கடந்து சென்றுள்ளது.
ஐரோப்பாவின் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் அறிவிப்பின்படி பூமியை மிக அருகில் இந்த விண்கல் கடந்து சென்றுள்ளது. பூமியில் இருந்து 0.8 லூனார் தொலைவில்தான் அது பூமியை கடந்துள்ளது. அதன்படி பூமியில் இருந்து 384317 கிலோ மீட்டர் தொலைவில் நிலவு இருக்கிறது. இந்த விண்கல் பூமியை 307454 கிமீ தொலைவில் கடந்து சென்றுள்ளது.
ஆனால் இவ்வளவு நெருக்கமாக வந்தும் இது பூமியின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்படவில்லை. பூமி மீது மோதவில்லை. இந்த விண்கல் பெயர் 2020 எல்டி என்பதாகும். இந்த வருடத்தில் பூமியை கடந்து சென்ற பெரிய விண்கல் இதுதான். பூமியை இதுவரை கடந்து சென்ற விண்கற்களில் இது இரண்டாவது பெரிய விண்கல் ஆகும்.
இதற்கு முன் 2011ல் இதேபோல் பெரிய விண்கல் பூமியை கடந்து சென்று இருக்கிறது. இதில் திருப்பம் என்னவென்றால் இந்த விண்கல் பூமியை கடக்கும் வரை அதை கண்டுபிடிக்கவே முடியவில்லை. ஆம் பூமியை அந்த விண்கல் கடந்து 2 நாட்கள் கழித்து 7ம் திகதிதான் இது பூமியை கடந்ததை கண்டுபிடித்து உள்ளனர். சத்தமே இல்லாமல் இது எப்படி பூமியை கடந்தது என்று விசாரித்து வருகிறார்கள்.