இந்து பக்தர்களையும் அழைத்துக்கொண்டு நான் கதிர்காமத்திற்கு பாதயாத்திரை செல்வேன், என்னை யாரும் தடுக்கக் முடியாதென மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி வண. அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களுக்கு இது தொடர்பில் விளக்கமளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர்,
ஜனாதிபதியும், பிரதமரும் எத்தனையோ கூட்டங்களுக்கும், நிகழ்வுகளுக்கும் அழைக்கப்படுகிறார்கள். அவைகளில் அவர்கள் பங்கேற்கிறார்கள். அது கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் சுகாதார விதிகளுக்கு பொருந்துமாக இருந்தால், அவ் நிகழ்வுகள் அரசால் தடைசெய்யப்படாமல் அனுமதிக்கப்படுவதாக இருந்தால், கதிர்காம பாத யாத்திரையும் அனுமதிக்கப்படுவதில் தப்போ தவறோ காண முடியாது.இந்த நாட்டு மக்கள் இவைகளை அவதானித்து வருகிறார்கள்.
இப்படி இருக்கும்போது இந்து பக்தர்கள் தான் பக்தி வைத்துள்ள முருகக் கடவுளிடம் பாதயாத்திரையாக செல்வதில் என்ன தவறென கேள்வி எழுப்பினார். ஒரு அரசியல் கூட்டத்தைவிட ஒரு பக்தன் தனது இஷ்ட தெய்வத்திடம் கால் நடையாக யாத்திரை செல்வதில் ஏதும் தவறில்லை.
இந்த நாட்டில் பௌத்தருக்கும், இந்துவுக்கும் சம நீதி இருக்க வேண்டும்.
கதிர்காம பாத யாத்திரை தொன்றுதொட்ட நிகழ்வு, அந் நிகழ்வுகளை அரசு கட்டுப்படுத்துவது ஒரு பாரபட்சமான காரியமாகும்.
இதற்கு அனுமதி கோரி ஜனாதிபதிக்கு இரண்டு கடிதங்களை கடந்த மாதம் 24 ஆம் திகதி அனுப்பி வைத்திருந்தேன். அதனைத் தொடரந்து இன்றும் ஒரு கடித்தை அனுப்பியிருக்கிறேன். எதுவித பதிலும் எனக்கு கிடைக்கவில்லை.
அதனால் நான் இந்த முடிவை எடுப்பதற்கும் செயற்படுத்துவதற்கும் அரசினால் தள்ளப்பட்டுள்ளேன் என்றார்.