தமிழ் மக்களின் ஆயுதப்போராட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லையென சுமந்திரன் கூறியிருந்ததை தமிழ் தெசியக் கூட்டமைப்பு அது அவரது தனிப்பட்ட கருத்து என கூறியிருந்தது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் சித்தார்த்தன் தலைமையில் யாழில் நடைபெற்ற கூட்டமொன்றின் போதே தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
இதன் போது ஆதங்கப்பட்ட மக்களிடம் சித்தார்த்தன் சுமந்திரனைப் பிடிக்காவிட்டால் அவருக்கு வாக்களிக்காதீர்கள் என யாரும் எதிர்பாராத அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.
அதன் பின்னர் அங்கு வருகை தந்தவர்கள்….
இலங்கை அரசியலில் முக்கியமான வகிபாகம் வகிக்கும் பிரதான கட்சியொன்றின் ஊடக பேச்சாளர் இவ்வாறு கூறியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியுமா?
மக்களின் பிரச்சினைகளை சர்வதேசத்திற்கு எடுத்துச் செல்லக்கூடியவரின் கருத்தை தனிப்பட்ட கருத்தாக கருதினால் அவரை நம்பி எப்படி மக்களின் பிரதிநிதியாக தெரிவு செய்ய முடியும்?
தனி நபரான சுமந்திரனால் தமிழ் தேசிய இனத்தின் அடையாளமான தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாரிய நெருக்கடி அல்லது பாரிய ஆபத்தில் உள்ளதை என்னால் உணர முடிகிறது சுமந்திரன் தமிழ் இனத்திற்கு பிடித்துள்ள கொரோனா இதனை இந்த தேர்தலுடன் அகற்றா விட்டால் சிங்களவர்களால் வரும் அழிவை விட இரட்டிப்பு அழிவு தமிழ் இனத்திற்கு வருவதை சம்பந்தன் அண்ணனும் தடுக்க முடியாது என கூட்டம் முடிந்த பின் வருகை தந்த ஆதரவாளர்களிடம் சித்தார்த்தன் ஆதங்கத்துடன் கூறியதாக மேலும் ஊடகவியலாளர் குறிப்பிட்டார்.