இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீரின் சில பகுதிகளை பாகிஸ்தான் ஆக்கிரமித்து உள்ளது. இதற்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (Pakistan-occupied Kashmir – PoK) என்று பெயர்.
இந்த நிலையில் இங்கு இருக்கும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளுக்கு தற்போது சீனா குறி வைத்து இருக்கிறது என்று இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதற்காக ஒப்பந்தம் ஒன்றும் போடப்பட்டுள்ளது. அதன்படி பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் சீனா நீர் மின்சார திட்டம் ஒன்றை நிறைவேற்ற உள்ளது.
இதற்காக 11 ஆயிரம் கோடி ரூபாயில் இரண்டு நாடுகளும் ஒப்பந்தம் செய்துள்ளது என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் சீனா சிபிஇசி என்ற திட்டத்தை கையில் எடுத்துள்ளது. சீனா – பாகிஸ்தான் எக்கனாமிக் காரிடார் என்பது இந்த திட்டத்தின் பெயர் ஆகவும். சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் திட்டத்தின் ஒரு வகை ஆகும் இது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை மொத்தமாக ஆக்கிரமிக்கும் வகையில் சீனா இப்படி செய்கிறது. இதற்காக சீனா அங்கே ராணுவ கட்டுமான பணியாளர்களை குவிக்க உள்ளது .
எனினும் இதற்கு சீனாவின் இந்த திட்டத்திற்கு இந்தியா கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஆசியாவை மொத்தமாக கட்டுக்குள் கொண்டு வருவதுதான் சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் திட்டம். இப்போது அதன் ஒரு பகுதியாக பாகிஸ்தானில் சீனா ஆக்கிமிரமிக்க தொடங்கி உள்ளது. இந்தியாவிற்கு கீழ் இருந்த பகுதியில், இந்தியாவின் அனுமதி இன்றி பாகிஸ்தான் – சீனா இணைந்து திட்டங்களை கொண்டு வருவதை ஏற்க முடியாது, என்று இந்தியா கூறியுள்ளது.