லண்டனில் கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கை பெண் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான நபர் தொடர்பில் முக்கிய தகவல்கள் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2009ஆம் ஆண்டு, மே மாதம் 30ஆம் திகதி, சனிக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில், கிழக்கு லண்டனின் Walthamstow என்ற பகுதியில் அமைந்துள்ள பூங்கா ஒன்றில் ஒரு இளம்பெண் உடல் அரை நிர்வாணமாக கிடந்ததைக் கண்ட மக்கள் பொலிசாருக்கு தகவலளித்தனர்.
பொலிசார் வந்து பார்க்கும்போது அந்த பெண் ஏற்கனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.
பின்னர் அவர் இலங்கையை பூர்வீகமாக கொண்ட Michelle Samaraweera என்னும் இளம் விதவைப்பெண் என்பது தெரியவந்தது.
உடற்கூறு ஆய்வில், அவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக இரண்டு ஆண்டுகளுக்குப்பின் 2011ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் திகதி Aman Vyas என்ற மாணவர் விசாவிலிருந்த இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இதன்பின்னர் கடந்த 2019ஆம் ஆண்டு Aman Vyas பிரித்தானியாவுக்கு நாடுகடத்தப்பட்ட நிலையில் அவர் மீதான வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
நேற்று புதன்கிழமை மீண்டும் Aman Vyas நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது தன் மீதான ஒரு துஷ்பிரயோக வழக்கை ஒப்பு கொண்டAman Vyas மற்ற 10 வழக்குகளை மறுத்தார்.
Michelle மட்டுமின்றி வேறு மூன்று பெண்களையும் Aman Vyas துஷ்பிரயோகம் செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் நள்ளிரவு மற்றும் அதிகாலையில் இருட்டான சூழலில் Aman Vyas சாலையில் தனியாக யாராவது பெண் செல்கிறாரா என்பதை நோட்டமிட்டு அவர்களை குறிவைத்து வன்கொடுமை செய்துள்ளார் என கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து Michelle மீதான வழக்கு விசாரணை நடைபெறவுள்ளது.