ட்விட்டர் நிறுவனம் ஆனது அனைவரும் முக கவசம் அணிந்தால் மட்டுமே எடிட் ஆப்சன் தரப்படும் என கிண்டலான ஒரு பதிவை வெளியிட்டுள்ளது.
நவீன யுகத்தில் சமூக வலைதளங்கள் மக்களின் பயன்பாட்டில் பெரிதும் பங்கு வகிக்கின்றன. அந்த வகையில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவைகளில் நாம் பதிவிடுவதை எடிட் செய்யும் வசதி உள்ளது.
ஆனால், பலதரப்பட்ட அப்டேட்களை விடும் ட்விட்டர் எடிட் ஆப்ஷனை மட்டும் தரவில்லை. உங்களது ட்வீட்டில் ஏதேனும் தவறு என்றால் அதனை நீக்கிவிட்டு புதிதாகத்தான் ட்வீட் செய்ய வேண்டுமே தவிர எடிட் செய்ய முடியாது.
பயனாளர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் எடிட் ஆப்ஷனை கொடுக்கவில்லை. எடிட் ஆப்ஷன் கொடுக்கப்பட்டால் பதிவுகளின் உண்மைத்தன்மை போய்விடும் என்ற கருத்தை ட்விட்டர் கூறி வருகிறது.
இந்நிலையில், இன்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அந்நிறுவனம், அனைவரும் மாஸ்க் அணிந்துவிட்டால் நீங்கள் எடிட் செய்யும் வசதியைப் பெறலாம் எனத் தெரிவித்துள்ளது.
ட்விட்டர் நிறுவனத்தின் இந்த மறைமுகமான கிண்டல் பதிவுக்குப் பதில் அளித்துள்ள பலரும், பல விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் அனைவரும் மாஸ்க் அணிவது நடக்காததாக இருக்கிறது.
அதனால், அனைவரும் முகக்கவசம் அணிவது சாத்தியமல்ல, அதேபோன்று ட்விட்டரும் எடிட் ஆப்ஷனை தருவது சாத்தியமல்லை என்று பலரும் பல கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.
You can have an edit button when everyone wears a mask
— Twitter (@Twitter) July 2, 2020