யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நேற்று (8) காலை உத்தியோகத்தர் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகம் முன்பாக இடம்பெற்ற இந்த சம்பவத்தில், அந்த பிரிவில் பணியாற்றுபவரே காயமடைந்துள்ளார்.
இந்த தாக்குதலுடன் தொடர்புடைய 6 ரௌடிகள் நேற்று இரவு யாழ்ப்பாண தலைமையக பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து வாள்கள் 2, கைக்கோடாரி 1, மோட்டார் சைக்கிள் 2, முச்சக்கர வண்டி 1 என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
அளவெட்டியில் இயங்கிய கனி என்ற ரௌடிக்குழுவிலிருந்து பிரிந்து, மல்லாகம் பகுதியில் இயங்கிய ரௌடிகளே கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த குழுவிலிருந்த ரௌடி ஒருவனின் நண்பனுக்கும், குறிப்பிட்ட அரச அலுவலருக்குமிடையில் முரண்பாட்டையடுத்து, அதற்கு பழிவாங்கவே வாள்வெட்டு தாக்கதல் நடத்தியதாகவும் ரௌடிகள் வாக்குமூலம் வழங்கியதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.