ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழக நிகழ்வு ஒன்றின் போது மாணவன் ஒருவன் தள்ளிவிட்ட டயருடன் மோதி அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த பசிந்து ஹிருஷான் நேற்று (08) மீண்டும் பல்கலைகழகத்திற்கு சென்றிருந்தார்.
அவருடைய கல்வி நடவடிக்கைகளை தொடர்வதற்காகவே அவர் சென்றிருந்தார்.
கடந்த மார்ச் மாதம் 5 ஆம் திகதி நடந்த பல்கலைகழக நிகழ்வு ஒன்றின் போது, மேடையிலிருந்து ரக்டர் டயர் ஒன்றை மாணவன் ஒருவன் தள்ளிவிட்டிருந்தார். அது பசிந்துவின் தலையில் மோதியதில் அவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கிட்டத்தட்ட 3 மாதங்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நரம்பியல் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர், ஜூன் 11ஆம் திகதி வீடு திரும்பியிருந்தார். அவர் விபத்து சம்பவத்தை நினைவுகூர முடியாதவராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அந்த விபத்து பகிடிவதை சம்பவமென விமர்சனம் கிளம்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.