இந்திய அணியின் நட்சத்திர வீரரான டோனிக்கு ஓய்வு பெறும் எண்ணம் இருக்கிறதா என்பது குறித்து அவரின் மேனேஜர் சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை தொடருக்கு பின், டோனி எந்த ஒரு சர்வதேச போட்டியிலும் விளையாடவில்லை.
ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்று எதிர்பார்த்தால், கொரோனா காரணமாக ஐபிஎல் தொடரும் நடைபெறவில்லை. இதனால் டோனியின் ஓய்வு குறித்து பல்வேறு தகவல்கள் வந்து கொண்டே தான் இருக்கின்றன.
இந்நிலையில், டோனியின் நெருங்கிய நண்பரும் மேனஜருமான மிகில் திவாரகர் பிரபல செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், நண்பர்களான நாங்கள் அவரின் கிரிக்கெட் குறித்தெல்லாம் பேசிக் கொள்வதில்லை. ஆனால் அவரைப் பார்க்கையில் அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது பற்றி சற்றும் யோசிக்கவில்லை.
ஐபிஎல் போட்டிகளில் விளையாட அவர் ஆயுத்தமாக இருந்ததையும் நாம் பார்த்தோம்.
ஐ.பி.எல் தொடர் துவங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே சென்னையில் வந்து பயிற்சியை துவங்கியதும் நாம் பார்த்தோம்.
ஐபிஎல் குறித்து பிசிசிஐ பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது நிச்சயம் ஐபிஎல் நடந்தால் டோனி மீண்டும் களம் இறங்கி சிறப்பாக செயல்படுவார் நாடு முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப் பட்ட இந்த நேரத்திலும் டோனி தன்னை மிகவும் பிட்டாக வைத்துள்ளதாக கூறியுள்ளார்.