பாகிஸ்தானில் நடைபெறவிருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டிருப்பதாக, இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
2020 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
தற்போது செப்டம்பர் மாதம் நடக்க இருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டு இருக்கிறது என இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி நேற்று இன்ஸ்டாகிராம் நேரலையில் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் இசான் மணியும் கொரோனா வைரஸ் பரவலால் ஆசிய கோப்பை போட்டியை ரத்துசெய்யும் நிலைமைக்கு தள்ளப்பட்டதாக கூறியுள்ளார்.
மேலும் அவுஸ்திரேலியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டு இருக்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தள்ளிவைக்கப்படுவது குறித்து நாளை அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.