Loading...
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பி.சி.ஆர். பரிசோதனை ஆய்வுகூடம் திறக்கப்பட்டுள்ளது.
இது மூலக்கூற்று உயிரியல் வைத்திய ஆய்வுகூடம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. அதில் பி.சி.ஆர். இயந்திரங்கள் 02, நியூக்ளிய அமிலங்களை பிரிக்கும் தன்னியக்க இயந்திரங்கள் 02, பாதுகாப்புப் பெட்டகங்கள் 03 நிறுவப்பட்டுள்ளன.
Loading...
நாளொன்றுக்கு 500 விமானப் பயணிகளுக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் குறித்த ஆய்வுகூடம் அமைந்துள்ளது.
குறித்த மருத்துவ ஆய்வுகூடத்தின் மதிப்பு சுமார் 70 மில்லியன் ரூபாவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...