சட்டவிரோதமாக நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்பட்டு சுங்கத் துறையினரால் அரசுடமையாக்கப்பட்டுள்ள வாகனங்களை அரச நிறுவனங்களின் பாவனைக்கு பெற்றுக் கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அது தொடர்பில் நிதி அமைச்சரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ள பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.
நேற்றைய தினம் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
வெளிநாடுகளிலிருந்து சட்டத்திற்கு முரணான வகையில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் சுங்கத் திணைக்களத்தினரால் அரசுடமையாக்கப்பட்டு வருகின்றன.
அத்தகைய வாகனங்களை சுங்கப் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியுடன் இராணுவத்தினர் மற்றும் அரச நிறுவனங்களில் உபயோகத்திற்கு பெற்றுக்கொடுக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்