கலிபோர்னியாவின் வென்சுராவில் உள்ள பிரு ஏரிக்குச் 4 வயது மகனுடன் படகு சவாரி சென்ற நடிகை திரும்ப வராததால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கலிபோர்னியாவில் பிரபல டிவி நட்சத்திரம் நயா ரிவேரா. இவர் நேற்று தனது 4 வயது மகன் ஜோசி டோர்சின் யுட் உடன் அங்குள்ள ஏரியில் படகு சவாரி சென்றார்.
ஒரு படகு மட்டும் குறிப்பிட்ட நேரத்திற்கு வராமையால் பராமரிப்பாளர்கள் அந்த படகை தேடிச் சென்றனர். அப்போது அந்த படகில் மகன் மட்டுமே தூங்கியபடி இருந்துள்ளான். அவனிடம் கேட்டபோது அம்மா நீச்சலடிக்க சென்றார்.
திரும்பி வரவில்லை என்று கூறினார்.ஆனால் அவருடைய கவச உடையும் படகிலேயே இருந்தது. சிறிது நேரத்தில் அவரது மகன் கண்டுபிடிக்கப்பட்டார்.
சிறுவன் கூறுகையில் தனது அம்மா “தண்ணீரில் குதித்தார், ஆனால் மீண்டும் மேலே வரவில்லை” என்று பொலிசாரிடம் கூறினார்.
ஹெலிகொப்டர்கள், ஆளில்லா விமானம் மற்றும் டைவ் குழுக்களைப் பயன்படுத்தி தேடுதல் நடவடிக்கை நடைபெற்றது. விடிய விடிய நடந்த தேடுதலில் ஒருதகவலும் கிடைக்கவில்லை. இன்று காலை முதல் தேடுதல் வேட்டை நடந்து வந்தது. ஆனால் ஒருதகவலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் இன்று நடத்தப்பட்ட தேடுதலில் உடல் மீட்கப்பட்டது. அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.