வட சுவிஸ் மாகாணங்கள் பலவற்றின் அதிகாரிகள் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளார்கள்.
பேசல், ஆர்காவ் மற்றும் சோலோதர்ன் மாகாணங்கள் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளதையடுத்து, மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அந்த மாகாணங்கள் நேற்று அறிவித்துள்ளன.
இந்த நடைமுறைகள் இன்று (9.7.2020) முதல் அமுலுக்கு வருகின்றன. தனியார் பார்ட்டிகள், உணவகங்கள், இரவு விடுதிகள் போன்றவற்றில் பங்கேற்க 300 பேருக்கு அனுமதியளிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த எண்ணிக்கை மீண்டும் 100 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
சமூக இடைவெளி விதிகள் கடைப்பிடிக்கப்பட இயலாதபோது, அல்லது மாஸ்குகள் முதலான பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்த இயலாத சூழலில் மட்டுமே இந்த விதிகள் பின்பற்றப்படவேண்டும்.
இந்த விதிகள் சோலோதர்ன் மாகாணத்தில் ஆகத்து 31 வரையும், மற்ற பகுதிகளில் டிசம்பர் 31 வரையும் அமுலில் இருக்கும்.