Loading...
இன்றைய காலகட்டத்தில் மக்களின் முக்கிய பொழுதுபோக்குக்காக முதலில் இருப்பது சினிமா தான். இந்த சினிமாவால் ஈர்க்கப்பட்ட பல இளம் கலைஞர்கள் தங்கள் வசதி ஏற்ப சில குறும்படங்கள், வீடியோ பாடல்கள் உருவாக்கி வருவதை தற்போதைய கலாச்சாரமாகி விட்டது. அந்த வகையில் இசைமைப்பாளர் சாய்தர்ஷன் இசையில் வனோதன் கீதீர்ஸ்வரன் வரிகளில் அழகே என்ற வீடியோ பாடல் உருவாகியுள்ளது. இப்பாடலின் ஒளிப்பதிவும் பாடலின் வரிகளும் நம்மை வேறு உலகுக்கு கொண்டு செல்கிறது, மேலும் பாடலில் ராகுல் நம்பியார் மற்றும் மேரி மடோனா குரலில் மிக அழகாகவும் அதே சமயம் யதார்த்தமாகவும் வனோதன், துர்கா சபாபதி நடித்துள்ளனர். ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளனர் விஜயகுமரன், அர்ஜந்த் மகரா. அழகே குழுவினருக்கு சினிஉலகம் சார்பாக வாழ்த்துக்கள்.
Loading...
Loading...