தமிழ் தொலைக்காட்சிகளில் டாக் ஷோ நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு இது கெட்ட காலம் என்றே சொல்ல வேண்டும். பல தொகுப்பாளினிகள் பலரும் சமூக வலைத்தளங்களில் படாத பாடு பட்டு வருகின்றனர்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் தொகுப்பாளர் லட்சுமி ராமகிருஷ்ணனை சமூக வலைதளங்களிலும், சினிமா மற்றும் தொலைக்காட்சிகளிலும் தொடர்ந்து கிண்டல் செய்து வருகின்றனர். அதனால் அவர் சமூக வலைதளத்தை விட்டே வெளியேறி விட்டார்.
தற்போது அந்த வரிசையில் நடிகை குஷ்பூ இணைந்திருக்கிறார். சன் டிவியில் நடிகை குஷ்பூ தொகுத்து வழங்கும் நிஜங்கள் நிகழ்ச்சியின் புரோமோவை கிண்டலடித்து சிலர் டுவிட்டரில் கருத்து பதிவிட்டிருந்ததால் குஷ்பூ பொறுமை இழந்துள்ளார்.
குஷ்புவின் கோபம்
எல்லை தாண்டி அநாகரிகமான முறையில் கருத்து தெரிவித்ததால் குஷ்பூ அதற்கு பதில் அளிக்கும் வகையில் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.சிலருக்கு அழுத்தமாக சொல்ல வேண்டி இருக்கிறது, அவர்கள் ஒரு பெண்ணில் இருந்து தான் பிறந்தவர்கள் என்றும், நாளை அவர்களுக்கும் பெண் குழந்தை பிறப்பாள் என்றும், நன்றி என்று பதிவிட்டுள்ளார் குஷ்பு
போய் வேலைய பாருங்க
நாங்க எப்படி ரியாக்ட் செய்வது என்று கேட்டதற்கு, சில பதிவுக்கு முகம் தெரியாம கேள்வி கேட்கிற நீ போய் உன் வேலையை பாரு என்று பதிவிட்டுள்ளார்.
அம்மாவை பார்த்து கேளுடா
அநாகரீகமாக பதிவிட்டுள்ள கேள்விக்கு கோபத்துடன், உங்க அம்மாவைப் பார்த்து அந்த கேள்வியைக் கேளுடா என்று கூறியுள்ளார் குஷ்பு. குஷ்பூவின் டுவிட்டர் பதிவுக்கு பாடகி சின்மயி ஆதரவு தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்கள்
குஷ்பு தனது டுவிட்டர், ஃபேஸ்புக் பக்கத்தில் மிகவும் ஆக்டிவ் ஆக இருப்பார், டிவி நிகழ்ச்சிகள், அரசியல் நிகழ்வுகளையும் பதிவு செய்திருப்பதால் அதை பலரும் ரீ டுவிட் செய்வார்கள். குஷ்பு நிஜங்கள் நடத்த ஆரம்பித்த பின்னர் அதிக அளவில் குஷ்புவை தாக்கி கமெண்ட்டுகள் பதிவிடப்படுகின்றன.