பாடசாலை மாணவர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய க.பொ. த உயர்தர பரீட்சை நடத்தும் திகதியை மாற்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் வெளியிட்டுள்ளனார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு பொதுஜன பெரமுன கட்சி சார்பில் பிரச்சார நடவடிக்கையில் ஜனாதிபதி ஈடுபட்டு வருகிறார்.
கண்டியில் நேற்று இடம்பெற்ற பிரச்சார கூட்டங்கள் பலவற்றில் ஜனாதிபதி கலந்து கொண்டார். இதன்போது மாணவர்கள் சிலர் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
உயர்தர பரீட்சை திகதியை மாற்றுமாறு ஜனாதிபதியிடம் குறித்த மாணவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பரீட்சையை நடத்துமாறு மாணவர்கள் விடுத்த கோரிக்கைக்கு ஜனாதிபதி உடனடியாக பதிலளித்துள்ளார்.
அதற்கமைய இந்த விடயத்தை உடனடியாக கல்வி அமைச்சரிடம் கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்வதாக ஜனாதிபதி மாணவர்களிடம் உறுதியளித்துள்ளார்.