இந்தியாவில் குடிபோதையில் வீட்டுக்கு வந்த காவலர் தனது மனைவியை சுட்டு கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சோனு (35). இவர் மனைவி சாக்ஷி. சோனு காவல்துறையில் பணிபுரிந்து வந்தார்.
சில மாதங்களாக அவர் பணிக்கு செல்லாமல் இருந்துள்ளார்.
மேலும் மதுவுக்கு அடிமையான சோனு தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியை அடித்து கொடுமைப்படுத்தி வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு சோனு மதுபோதையில் வீட்டுக்கு வந்தார். இதனால் கோபமடைந்த சாக்ஷி அவரை வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்தார்.
இதனால் ஆத்திரமடைந்த சோனு தன்னிடம் இருந்த துப்பாக்கியால் மனைவியை சரமாரியாக சுட்டார்.
இதையடுத்து வலியால் சாக்ஷி கதறிய நிலையில் கீழ்தளத்தில் இருந்த குடும்பத்தார் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்து பார்த்து அங்குள்ள சூழலை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அதற்குள் சோனு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அப்போது குடும்பத்தார் சாக்ஷியை மீட்க முயல்வதற்குள் அவர் உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் இரண்டு பேரின் சடலங்களையும் கைப்பற்றி விட்டு இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.